உள்நாடுவிளையாட்டு

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வீரர் கைது (PHOTO)

(UTV | கொழும்பு) –இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வீரர்  பன்னலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் செஹான் மதுசங்கவிடமே போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சுதந்திர கிண்ண டி20 போட்டிகளில் ...

இவரிடம் 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கை அணியின் செஹான் மதுசங்கவை நீதிமன்றில் முன்னிலைபடுத்திய பின்னர் அவரை எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

இவர் விளையாடிய முதலாவது கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் சுமார் 4 மணித்தியால மின்வெட்டு

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது