வகைப்படுத்தப்படாத

இலங்கை – இந்தோனேஷியா மூன்று புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

(UTV|COLOMBO)-இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும இடையில் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

மருத்துவ உபகரண உற்பத்தி, ரயில்வே துறையின் அபிவிருத்தி, கல்வித்துறையின் மேம்பாடு போன்றவற்றில் இலங்கைக்கு உதவும் வகையில், உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை வந்துள்ள இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இந்தோனேஷிய ஜனாதிபதி நேற்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

 

இந்தப் பேச்சுவார்த்தையில் பிரதானமாக மூன்று விடயங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான தனிநபர் மற்றும் நிறுவன ஆற்றல்களை மேம்படுத்தும் வழிவகைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

கடந்த ஆண்டு இலங்கை அரிசி தட்டுப்பாட்டை எதிர்கொண்ட போது இந்தோனேஷிய அரசாங்கம் 5 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை வழங்கியமை குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது நன்றி தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா பயணம்…

டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் மூன்று மாத கால வேலைத்திட்டம்

Sudan junta and civilians sign power-sharing deal