உள்நாடு

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – கல்வி அமைச்சில் வெற்றிடமாக உள்ள 18 கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆணையாளர் பதவிகளுக்கு பணிமூப்பு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனங்களை வழங்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

நியமனங்கள் தொடர்பான நேர்முகத்தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தமது சங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் தொடர்பில் இதுவரை தெளிவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் மாலி – மஹிந்தானந்தா முறுகல்

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் கோரிக்கை

New Diamond கப்பலின் கெப்டனிடம் வாக்குமூலம் பதிவு