உள்நாடு

இலங்கை அமைச்சர்கள் வெளிநாட்டிலும், நுவரெலியாவிலும் தஞ்சம்!!

சிங்கள தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக நாடாளுமன்ற அமைச்சர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதுடன் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் ஐரோப்பா உள்ளிட்ட தனது பிள்ளைகள் படிக்கும் நாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் மற்ற அமைச்சர்கள் வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் விடுமுறை இல்லங்களுக்குச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும் சில அமைச்சர்கள் இலங்கையின் நுவரெலியா மற்றும் ஏனைய பிரதேசங்களில் புத்தாண்டை கொண்டாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதியில் உள்ள அனைத்து அறைகளும் தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நுவரெலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்தாண்டின் போது நீண்ட விடுமுறை கிடைத்துள்ள நிலையில், நாடாளுமன்ற செயற்பாடுகள் எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் தொடங்கவுள்ளது.

Related posts

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

‘தாய் நாட்டை வழி நடத்த தயார்’ – சஜித்

மாலைத்தீவில் இருந்து 179 பேர் நாடு திரும்பினர்