விளையாட்டு

இலங்கை அணி 144 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடுமா?

(UTV|COLOMBO)-மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ​மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படோசில் நடைபெறுகிறது.

நாணய சுழற்சியை வென்ற ​மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது.

முதல் இன்னிங்சில் ​மேற்கிந்திய தீவுகள் அணி 69.3 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் லஹிரு 4 விக்கெட்டுக்களும் ராஜித 3 விக்கெட்டுக்களும் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதை அடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. ​மேற்கிந்திய தீவுகளின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி திணறியது.

இதனால் இலங்கை அணி 59 ஒவர்களில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர்.

​மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளும் கெப்ரியல் 3 விக்கெட்டுகளும் ரோச் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ​மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது.

ஆனால் இலங்கை அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். இதனால் முதலில் இருந்தே ​மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் ​மேற்கிந்திய தீவுகள் அணி 31.2 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

எனவே இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 144 ஓட்டங்களை பெற்றால் வெற்றி பெறும்.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 16 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

எம்.பி. பதவி சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கிய சச்சின்

ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்த பெலருஸ் பயிற்சியாளர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றி…