விளையாட்டு

இலங்கை அணிய கேவலமாக சித்தரிக்கும் காம்ரான் அக்மல்

(UTV |  பாகிஸ்தான்) – இந்திய அணி இப்போது இருக்கும் வீரர்களைக் கொண்டு 3 அணிகளைக் கூட உருவாக்கலாம் என பாகிஸ்தான் விக்கெட் காப்பாளர் காம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இன்னும் சில நாட்களில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 மாதங்கள் தங்கி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் இளம் வீரர்களைக் கொண்ட அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் காம்ரான் அக்மல் இந்தியாவின் சி டீம் கூட இலங்கை அணியைத் தோற்கடிக்கும் எனக் கூறியுள்ளார்.

அதில் ‘இந்தியாவிடம் தற்போது கிரிக்கெட் உள்கட்டமைப்பு மிகச்சிறப்பாக உள்ளது. இலங்கைக்கு 3ஆவது அணியை உருவாக்கி அனுப்பினாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். டிராவிட் அடிதளத்தில் இருந்து வீரர்களை உருவாக்கி அனுப்புகிறார். அதை ரவி சாஸ்திரியும் கோலியும் மெருகேற்றுகின்றனர். வீரர்கள் இல்லை அல்லது காயம் என்ற கவலையே பிசிசிஐக்கு இருக்காது’ எனக் கூறியுள்ளார்.

Related posts

20 வருடங்களின் பின் தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட்டை ஆட்டி வைத்த கோலியும் அடக்க வந்த தோனியும்

தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில்…