விளையாட்டு

இலங்கை அணியின் புதிய தலைவர் தெரிவு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்கள் இருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கு தலைவராக தினேஷ் சந்திமல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்றைய தினம் தகவல்கள் வெளியான நிலையில், புதிய அpணத்தலைவர் தெரிவு பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் உப தலைவர் தினேஷ் சந்திமால், புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கு தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் தோல்வியடைந்தமை காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு மெத்திவ்ஸ் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

25 வயதுடைய மெத்திவ்ஸ் 2013ஆம் ஆண்டு இலங்கை அணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மெத்திவ்ஸ் தலைமையிலான இலங்கை அணி, 13 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.

தினேஸ் சந்திமால், உபுல் தரங்க, குசல் மெண்டிஸ் ஆகிய இலங்கை அணி வீரர்களில் ஒருவர் அணித் தலைவராக நியமிக்கப்படலாம் எனவும் முன்னதாக செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடம்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு

BPLக்கு 7 அணிகள்