விளையாட்டு

இலங்கை அணியின் தலைவரை மாற்றுமாறு கோரி கிரிக்கட் நிறுவனத்துக்கு அவசர கடிதம்

(UTV|COLOMBO)-உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கு முன்னர் அணியினை ஒருங்கிணைக்க கூடிய தலைவர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திசர பெரேரா இலங்கை கிரிக்கட் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த கடிதமானது இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வாவிற்கே அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறைவடைந்த நியுசிலாந்து தொடரின்போது திசர பெரேராவின் மனைவிக்கும், லசித் மாலிங்கவின் மனைவிக்கும் இடையில் சமூக வலைத்தளங்களில் பெரும் வார்த்தைப்போர் நடைப்பெற்றது.

இதனையடித்து விளையாட்டுதுறை அமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

இந்நிலையிலேயே இலங்கை அணியின் தலைவரை மாற்றுமாறு கோரி திசர பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது இருபது கிரிக்கட் தொடர்களுக்கு லசித் மாலிங்கவே தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திசர பெரேரா எழுதியுள்ள கடிதத்தில் அண்மை நாட்களில் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் என்னை பாதித்தன.

நான் ஒருபோதும் மேலிடத்தின் சிபாரிசின் பேரில் அணியில் இடம்பிடித்ததில்லை. இந்த குற்றச்சாட்டுகளினால் என்மீதுள்ள மக்களின் நம்பிக்கைக்கு பாதகம் ஏற்பட கூடும்.

நாம் இப்போது உலக கிண்ண தொடருக்கு தயாராக வேண்டிய கட்டயாத்தில் உள்ளோம், இந்நேரத்தில் அநாவசியமான விடயங்களுக்கு செவிமடுப்பதை தவிர்த்து அணியின் ஒற்றுமையை வளர்க்க முன்வர வேண்டும்.

அணியின் ஒற்றுமையை வளர்ப்பது தேவையாக உள்ளது. அந்த ஒற்றுமையை அணியை ஒருங்கிணைத்து செல்ல கூடிய அணித் தலைவர் ஒருவர் நிரந்தரமான தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று திசர பெரேரா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

இலங்கை திரும்புகிறார் மாலிங்க!

சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

தினேஷ் சந்திமால் செய்த காரியம்