விளையாட்டு

இலங்கை அணிக்கு 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி

(UTV|சிம்பாப்வே) – இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் லசித் எம்புல்தெனிய 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 515 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பாக ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சிம்பாப்வே அணி 170 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பந்து வீச்சில் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும் லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 14 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி எவ்வித விக்கெட்டுக்களையும் இழக்காமல் வெற்றி இலக்கை அடைந்தது.

அதன்படி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

Related posts

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை

இலங்கை அணிய கேவலமாக சித்தரிக்கும் காம்ரான் அக்மல்

டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் மாற்றம்