அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்திய IMF நிர்வாக பணிப்பாளர்

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர திசாநாயக்கவுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற சந்திப்பு குறித்து தமது ‘X’ கணக்கில் பதிவிட்டு இதனை அவர் கூறியுள்ளார்.

முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக பணிப்பாளர் தனது ‘X’கணக்கில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

மேலும் 33 பேர் பூரண குணமடைந்தனர்

காவிங்க பெரேராவுக்கு விளக்கமறியல்