சூடான செய்திகள் 1

இலங்கையை சேர்ந்த தற்கொலைகுண்டுதாரிகள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவல்

(UTVNEWS | COLOMBO) -இலங்கையை சேர்ந்த தற்கொலைகுண்டுதாரிகள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருயுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்சில் உள்ள பயங்கரவாதிகளிற்கு குண்டுதயாரிப்பது மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்குவது போன்ற விடயங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இலங்கையை சேர்ந்த தீவிரவாதிகள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவியுள்ளனர் என பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த தகவலை மனிலாவின் சர்வதேச விமானநிலை அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.

இருவரும் தற்கொலைகுண்டுதாரிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்க் கெவின் சம்கூன் என்ற பயங்கரவாதி இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர் எனவும் அவரது தாய் டுபாயை சேர்ந்தவர் தற்போது பிலிப்பைன்சில் பணிப்பெண்ணாக தொழில்புரிகின்றார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை பிலிப்பைன்ஸ் கடவுச்சீட்டுகளை கொண்டவர் மற்றொரு பெண்மணியும் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவான விபர வர்த்தமானி அறிவித்தல் இன்று

பிரதான ரயில் சேவையில் தாமதம்

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்