சூடான செய்திகள் 1

இலங்கையைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்

(UTV|COLOMBO)-இலங்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் இன்று (26) அதிகாலை உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தக்கூட்டத்தின் பொதுச் செயலாளர் நாயகத்தின் சார்பில் ஐ.நா. சபைக்கு இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை இந்தக்கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக வரவேற்கின்றோம்.

உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். கௌரவ தலைவர் அவர்களே , கௌரவ பொதுச் செயலாளர் அவர்களே, அனைத்து அரச தலைவர்களே, அனைத்து இராஜதந்திரிகளே, நண்பர்களே, ஐ.நா. சபையின் 73 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த மூன்றரை வருடங்களுக்கும் மேலாக அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் நாங்கள் அதிக மகிழ்ச்சியடைய முடியும். இலங்கையின் ஜனாதிபதியாக 2015 ஆம் ஆண்டு மக்களின் வாக்குகளினூடாக தெரிவுசெய்யப்பட்டேன்.

கடந்த மூன்றரை வருடங்களுக்குள் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளேன். மனித உரிமையை வலுப்படுத்தியுள்ளேன். மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளேன். ஊடக சுதந்திரத்தை முடிந்தளவு உறுதிப்படுத்தியுள்ளேன். நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதை உறுதிப்படுத்தியுள்ளேன். ஆகவே, மூன்றரை வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட இலங்கை இப்போது இல்லை. இப்போது காணப்படுவது மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் பரிபூரண சுதந்திரத்தை உடைய இலங்கையே தற்போது காணப்படுகின்றது என்பதை இங்கு என்னால் கூறிக்கொள்ள முடியும்.

அதேபோன்று, ஐ.நா. சபை என்ற அடிப்படையில் அதில் அங்கம் வகிக்கும் நாடுகள் எங்களுக்குள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை அரசியல் நிலை மற்றும் பொருளாதார நிலை மனிதாபிமானத்திற்கு எதிரான சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அவற்றிற்கு முகம் கொடுப்பது அவசியமாகின்றது. விசேடமாக சர்வதேச அரசியல் நிலை தொடர்பில் ஆராயும்போது, சர்வதேச ரீதியில் அகதிகளாக பலர் வாழ்கின்றனர். அகதிகள் தொடர்பிலான பிரச்சினை பாரியதொரு சிக்கல் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே, அது தொடர்பில் ஐ.நா. சபை மற்றும் அங்கம் வகிக்கும் நாடுகள் அத்துடன் அமைப்புக்கள் இது தொடர்பில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மேலும் தீவிரத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும் நான் நம்புகின்றேன்.

இதேவேளை, இலங்கை வௌிநாட்டுக் கொள்கைகளைப் பொறுத்தவரையில், நடுநிலையாக செயற்படுகின்றது. எந்தத்தரப்பையும் சாராத நாடாக இலங்கை காணப்படுகின்றது. 1946 ஆம் ஆண்டிலிருந்து எந்தத் தரப்பையும் சாராமல் செயற்பட்டு வருகின்றது. உலகிலுள்ள அனைத்து இனங்களும் அனைத்து அரசுகளும் எமது நட்புறவான இனங்களாகவும் அரசுகளாகவும் உறவைப் பேணி வருகின்றன. அத்தோடு, கடந்த காலத்தில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் எந்தவொரு எதிரியும் இல்லை என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். அது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். விசேடமாக பலஸ்தீன மக்களின் பிரச்சினை தொடர்பில் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச நாடுகள் இப்போதைய விட மேலும் அவதானம் செலுத்துவீர்கள் என நான் நம்புகின்றேன். பலஸ்தீன மக்களின் அமைதிக்காக இலங்கை எப்போதும் முன்னிற்கும் என்பதை விசேடமாக நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன். ஐ.நா. சபை மற்றும் அதிகாரம் மிகு சர்வதேச நாடுகள் பலஸ்தீனத்தில் மனித உரிமையைப் பாதுகாக்க இப்போதைய விட அதிகம் முன்னிற்பார்கள் என நான் நம்புகின்றேன்.

உலகத்திலுள்ள முக்கிய பிரச்சினைகளில் வறுமை முக்கியம் பெறுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த வறுமையை குறைப்பதற்கு இப்போதைய விட ஐக்கிய நாடுகள் சபை முன்னிற்க வேண்டும் என நான் நம்புகின்றேன். வறுமை தொடர்பில் பேசும் போது, சுமார் 100 கோடி வரையான மக்கள் பசியில் வாடுகின்றார்கள் என்பது எமக்குத் தெரியும். காலநிலை மற்றும் வருமானத்தை பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல் தன்மை, பின்னடைவு போன்றன வறுமையைத் தோற்றுவிக்கின்றன. எனவே, வறுமையை இல்லாதொழிக்க வேண்டும். நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு இந்த வறுமை பிரதானமாகக் கோலோச்சுகின்றது. வறுமை தொடர்பில் பேசுகின்றபோது, காலநிலை மற்றும் வானிலையால் பாதிப்புக்களை எதிர்நோக்கும் நாடுகளுக்கு இப்போதைய விட மேலும் உதவிகள் ஆதாரங்கள் தேவைப்படுகிகன்றன.

வறுமையைப் போன்று உலகில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளில் ஆயுத விற்பனை, போதைப்பொருள் வர்த்தகம், சட்டவிரோத மருந்து வர்த்தகம் போன்றன பாரிய நெருக்கடிகளை கொடுக்கும் பிரச்சினைகளாக வளர்ந்துள்ளன. எனினும், அமெரிக்க ஜனாதிபதி கௌரவ டொனால்ட் ட்ரம்பின் தலைமைத்துவத்தில் நேற்று காலை நடைபெற்ற ஐ.நாவின் பிரதான கூட்டத் தொடரில், போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பிலான விழிப்புணர்வு இடம்பெற்றமை தொடர்பில் மகிழ்வடைகின்றேன்.

அதேபோன்று, எனது நாட்டில் நான் நேசிக்கின்ற எனது தாய் நாட்டில் நான் முன்னர் குறிப்பிட்டது போல் மனித உரிமை, ஜனநாயகம், அடிப்படை உரிமைகள், ஊடக சுதந்திரம் இவற்றை மேம்படுத்த வேண்டும். 40 வருடங்களுக்கு முன்னர் எமது நாடு இருந்தநிலை, 30 வருடங்களாக நிலவிய யுத்தம் தொடர்பில் அவதானம் செலுத்தும் போது எமது நாடு எல்.டி.டி. அமைப்பை ஒழித்து 10 வருடங்களாகின்றன. 10 வருடங்களுக்குள் நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விசேடமாக எனது அரசாங்கம் அமைக்கப்பட்டு மூன்றரை வருடங்களுக்குள் பல விடயங்களை முன்னெடுத்துள்ளோம். தேசியளவில் மீண்டும் யுத்தம் ஏற்படாத நிலையை ஏற்படுத்தியுள்ளோம். தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மீண்டும் யுத்தம் வலுப்பெறுவதைத் தடுத்தல் உள்ளிட்ட குறிக்கோள்களை நாம் மிக முக்கியமாக நிறைவேற்றியுள்ளோம்.

இதேவேளை, மனித உரிமைகள் தொடர்பிலான விடயங்களை நிறைவேற்றிவரும் நாடு என்ற வகையில் ஐ.நா. சபை மற்றும் சர்வதே நாடுகளிடம் அதற்கான ஒத்துழைப்பை எதிர்பார்பர்க்கிறோம். உலகில் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பை இலங்கை பாதுகாப்புப் படையினர் வெற்றிகொண்டுள்ளனர். இதனால், பிளவுபடாமல் நிலையான சமாதானம் நிலவும் நாடாக இலங்கை திகழ்கின்றது. தீவிரவாத அமைப்பை தோற்கடித்த பாதுகாப்புப் பிரிவினருக்கு நான் இந்த வேளையில் நன்றி தெரிவிப்பதுடன், அது தொடர்பில் பெருமை கொள்கின்றேன்.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்குமாறு அனைத்து நாடுகளிடமும் நான் கோருகின்றேன். அபிவிருத்தியை நாளைய நாளுக்காக முன்னெடுத்து செல்வோம். எமக்கு காணப்படும் பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்கு எமக்கு சந்தர்ப்பம் தாருங்கள். இதனை நான் கௌரவமாக கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் சுயாதீனத்தன்மை மிகவும் முக்கியமானது. அந்த சுயாதீனத்தன்மையுடன் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது முக்கியமானதாகும். அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு எமக்கு எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கும் நாம் முன்னெடுக்கும் அர்ப்பனிப்பானது மிக முக்கியமானதாகும். சுயாதீனமான நாடு என்ற ரீதியில் எந்தவொரு வௌிநாட்டு அழுத்தம் எமக்கு முக்கியமில்லை. அதனால், நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பலம்மிக்க நாடாக எம்மை மாற்றிக் கொள்வதற்கு உதவுமாறு நான் இவ்விடத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

எமது இருப்பை ஸ்திரப்படுத்திக் கொண்டு முன்னோக்கி செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். இலங்கையர்கள் என்ற ரீதியில் எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு உங்களது ஒத்துழைப்புக்களை நான் கேட்டுக்கொள்வதோடு, எனது தாய் நாட்டில் வாழும் மக்களின் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதோடு, சகல மக்களிடத்திலும் சமத்துவத்தை மேம்படுத்த உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் நான் இவ்விடத்தில் கேட்டுக் கொள்கிறேன். நாளைய நாளில் இலங்கையை போன்று உலகம் முழுவதும் வாழும் துன்பகரமாக மக்களின் முன்னேற்றத்துக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்களுடைய பிரச்சினைகளுக்கு நாம் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க அரசுக்கு விரும்பவில்லை

உயர் கல்வி மாணவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு-அமைச்சர் ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதியின் அதிரடி தடை