விளையாட்டு

இலங்கையுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார் கோலி

(UTV|COLOMBO)-மூன்று போட்டிகள் கொண்ட இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் சமநிலையில் முடிய, நேற்று நிறைவடைந்த 2-வது டெஸ்டில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் டிசம்பர் 2ம் திகதி ஆரம்பமாகிறது.

அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி டிசம்பர் 10இலும், 2-வது போட்டி 13இலும், 3-வது போட்டி 16ம் திகதியும் நடக்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

ஐ.பி.எல். தொடரில் இருந்து தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்வின், ஜடேஜாவிற்கு ஒருநாள் தொடரில் மீண்டும் இடம் கிடைக்கவில்லை. சிதார்த் கவுல் முதன்முறையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் அய்யருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 15 பேர் கொண்ட வீரர்கள் விவரம்:-

ரோகித் சர்மா, தவான், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார். சிதார்த் கவுல்.

இதேவேளை, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அதே இந்திய அணி 3-வது டெஸ்டிற்கும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டி முடிந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விராட் கோலி பங்கேற்க வாய்ப்புள்ளது. முதல் இருபதுக்கு 20 போட்டி டிசம்பர் 20ம் திகதியும், 2-வது போட்டி 22ம் திகதியும், 3-வது போட்டி 24ம் திகதியும் இடம்பெறவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்பை அங்கீகரிக்கக் கோரி பி.சி.சி.ஐ.க்கு சச்சின் கடிதம்

டெல்லி அணியில் இருந்து அஷ்வின் விலகும் சாத்தியம்

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத போராட்டம்!