விளையாட்டு

இலங்கையுடனான இருபதுக்கு – 20 தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு இரு தலைவர்கள்

(UTV|COLOMBO) இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கும் தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டவுனில் நாளை ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் மாத்திரம் பெப் டுபிளஸிஸ் அணிக்கு தலைமை தாங்கவுள்ளதுடன், ஏனைய இரண்டு போட்டிகளிலும் ஜே.பி.டுமின் அணியை வழிநடத்தவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 2 பூஜ்ஜியம் என கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியதோடு, ஒருநாள் தொடரை ஐந்திற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மன அழுத்தத்தை குறைக்கவே ‘ஹெட் போன்’ அணிந்திருப்பேன் – ஒசாகா

நீச்சல் வீராங்கனை போக்லர்காவுக்கு கொரோனா

மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி