உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் 9வது மரணமும் பதிவு

(UTV | கொவிட் 19) -இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 9ஆவது மரணம் இன்று (05) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

‘ஐடிஎச்’இல் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 15ஐச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 755ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 197 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 550பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Related posts

“கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் எவ்வித சட்டசிக்கலும் இல்லை” கம்பனிகளை எச்சரிக்கும் ஜீவன்

உண்மையான வசந்தம் இனித்தான் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

editor

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் IMF விசேட அறிக்கை!