உள்நாடு

இலங்கையில்: 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர்

(UTV | கொழும்பு) –

சுகாதார வசதிகள் அவசியமான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை சரியாக அடையாளம் காண்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பது குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாகவும் அந்த குழுவில் தெரியவந்துள்ளது.

அண்மையில் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நாடாளுமன்றில் கூடிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளை உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இந்தநிலையில், பாடசாலை மாணவிகள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்படி, சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் தேவைப்படும் பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 168 சிறார்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாகவும் குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில், பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவசரமான தேவை என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு

அரிசி இறக்குமதிக்கு அவசியமில்லை – மஹிந்த அமரவீர

தயார்படுத்தப்படும் பரீட்சை நிலையங்கள்!