உள்நாடு

இலங்கையில் நாளாந்தம் 64 புற்று நோயாளர்கள்

(UTV|கொழும்பு) – புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதற்கு கொள்கை ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருனாபிரேம தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் நேற்று(10) சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாளாந்த வாழ்க்கை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு முடியும் என சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி ஜானகி விதான பத்திரண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் 64 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், வருடத்தில் 23,530 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

வருடத்தில் இந்த நோயினால் 14,013 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கர்நாடக தேர்தலில் வென்றார் ராகுல் காந்தி – ஹிஜாப் அணிவதை நிறுத்திய அமைச்சர் தோல்வி

ஐக்கிய மக்கள் சக்தியின்  ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 32 கோடி ரூபாவுக்கும் அதிகமான  நிதி!

புறக்கோட்டை சுமை தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு