உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் தயாரிக்கப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக் கப்பல் வெள்ளோட்டம்

(UTVNEWS | COLOMBO) – இலங்கையின் செலான் மெரின் லங்கா நிறுவனத்தின் தயாரித்த தீயணைப்பு மற்றும் மீட்புக் கப்பலை இன்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

இதில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கப்பலின் குறித்த வெள்ளோட்டத்தில் பங்கேற்றார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன தீ மற்றும் மீட்புக் கப்பல் 17.91 மீட்டர் நீளமும் 6.91 அகலமும் கொண்டது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு 35 மைல் வேகத்தில் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் தீயணைப்பு கருவிகளுக்காக இரண்டு அதிநவீன உயர் அழுத்த நீர் பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

குறித்த கப்பலை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் அதிக பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த ஜீவன் கடும் எதிர்ப்பு !

அரச ஊழியர்களுக்கு புதிய ஊதியத் திட்டம்-நிதி அமைச்சு

முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிக்கும் ‘புர்கா’ தடை