உள்நாடு

இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டமைக்கு செனெட் குழு கண்டனம்!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்படுவது குறித்து அமெரிக்க செனெட் வெளிவிவகார குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றவேளை தாக்குதலை தடுத்து நிறுத்துவத்காக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்தும் கரிசனை கொண்டுள்ளோம் என செனெட் குழு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் அதிஸ்டவசமாக பொலிஸார் பலரை கைதுசெய்துள்ளனர் – இந்த குற்றங்களிற்கு காரணமானவர்கள் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் எனவும் செனெட்குழு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுனில் ரத்நாயக்கவுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

சீரழிந்து வரும் அரசியல் கலாசாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – சஜித்

editor

கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு