உள்நாடு

இலங்கையில் தடுப்பூசி பாவனையை நிறுத்துவது தொடர்பில் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பில் ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொவிஷீல்ட் அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசியின் பாவனையை சில உலக நாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், இலங்கையில் தடுப்பூசி பாவனையை நிறுத்துவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சட்டமா அதிபரின் கோரிக்கை

மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு கோரிக்கை

ஜனாதிபதியின் அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பு