வணிகம்

இலங்கையில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் NOLIMIT தெரிவு

(UTV|COLOMBO)-இலங்கையின் முன்னணி நவநாகரிக ஆடை அணிகலன் விற்பனைத்தொடரான NOLIMIT இலங்கையில் தொழில்புரிவதற்கு சிறந்த 25 நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் தரப்படுத்தப்பட்டுள்ளது. LMD வியாபார சஞ்சிகை மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து Great Place to Work நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் போது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் NOLIMIT இந்தத் தகுதியினைப் பெற்றுள்ளது. தொழில்புரிவதற்கு சிறந்த நிறுவனம் எனும் அந்தஸ்தை பெற்றுக் கொண்டுள்ளதனூடாக, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நம்பிக்கை, பெருமை மற்றும் சமத்துவம் போன்ற கடுமையான நியதிகளை நிறுவனம் பூர்த்தி செய்துள்ளமை உறுதியாகிறது.

சர்வதேச ரீதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதுடன், இலங்கையில் தொடர்ச்சியான ஆறாவது ஆண்டாக Great Place to Work நிறுவனத்தினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த சாதனையினூடாக நிறுவனம் எனும் வகையில், NOLIMIT தனது ஊழியர்கள் குறித்து கவனம் செலுத்துவது வெளிப்படுவதுடன், அவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெருமை கொள்கின்றமை உறுதியாகியுள்ளது. NOLIMIT இல் கலாசார ரீதியில் பரந்துபட்ட ஊழியர்கள் காணப்படுவதுடன், நிர்வாகம் அவர்களின் நலன் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதுடன், அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை பெற்றுக் கொடுத்து, நிறுவனத்தின் கூட்டாண்மை நாமத்தை வலுப்படுத்தி வருகிறது.

ஊழியர்களை மையப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றமைக்காக நிறுவனம் பலதரப்பட்ட விருதுகளை வென்றுள்ளது. விற்பனை விருதுகள் வழங்கும் நிகழ்வில் வர்த்தக நாமச் சிறப்பு விருது மற்றும் சிங்கப்பூரில் இடம்பெற்ற CMO ஆசிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் செயற்திட்டத்துக்கான மெரிட் சான்றிதழ் விருது போனற்வற்றையும் வென்றிருந்தது. இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி கல்வியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பெருமை வாய்ந்த SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் வழங்கும் நிகழ்வில், வெள்ளி விருதையும் NOLIMIT தனதாக்கியிருந்தது.

NOLIMIT மனித வளங்கள் பிரிவின் முகாமையாளர் ரிஸ்வான் மொஹமட் கருத்துத் தெரிவிக்கையில், ´கலாசார ரீதியில் பரந்துபட்ட சூழலை ஏற்படுத்தி, அதனூடாக சிறந்த திறமையான ஊழியர்களை எம்மால் பேண முடிந்துள்ளது. இதுவே, எமது வலிமையாக காணப்படுகிறது. நாம் ஊழியர்கள் மீது அதிகளவு கரிசனை காண்பிக்கும் தொழில் வழங்குநராக திகழ்வதுடன், நம்பிக்கை தொடர்பில் உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளோம், இது Great Place to Work® ஆய்வில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது´ என்றார்.

ஊழியர்களை மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் பேணக்கூடிய அம்சங்களை NOLIMIT தன்வசம் கொண்டுள்ளது. இதில் ஒன்று உறுதியான குழுநிலைச் செயற்பாடாக அமைந்துள்ளதுடன், மற்றையது சேவை எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுகின்றது.

NOLIMIT முன்னெடுத்திருந்த மற்றுமொரு முக்கிய உள்ளம்சமாக, உள்நாட்டு வர்த்தக நாமங்களை கட்டியெழுப்பக்கூடிய திறன் கொண்டதாகவும், இதனூடாக வாடிக்கையாளர்களின் உள்ளங்களை வெல்லும் நிலையிலும் உள்ளது. NOLIMIT பொது முகாமையாளர் அம்ஜாத் ஹஸன் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையர்களின் மாறிவரும் ஆடைகள் மற்றும் நவநாகரிக போக்குகளை நிவர்த்தி செய்வதில் இரண்டு தசாப்த கால அனுபவத்தை நிறுவனம் கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தேசத்துக்கு உயர் தரம் வாய்ந்த சொப்பிங் அனுபவத்தையும் வழங்குகிறது என்றார். ´எமது விற்பனை நிலையங்களின் முன்னேற்ற நிலை தொடர்பில் எமது ஊழியர்கள் பெருமை கொள்வதுடன், எமது வெற்றியிலும் இவர்கள் அங்கம் வகிக்கின்றனர´; என்றார்.

நிறுவனம் தனது செயற்பாடுகளை 25 ஆண்டுகளுக்கு முன்னர் 1992ஆம் ஆண்டில் ஆரம்பித்ததிலிருந்து, படிப்படியாக வளர்ச்சியடைந்து தற்போது நாடு முழுவதிலும் 21 காட்சியறைகளை கொண்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் குடும்பத்தார் மத்தியில் பிரபல்யம் பெற்ற NOLIMIT மற்றும் GLITZ ஆகியவற்றுக்கு மேலதிகமாக, கலாசார பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் PALLU காட்சியறை, விலைக்கழிவு குறித்து அக்கறை கொள்ளும் வாடிக்கையாளர்களுக்காக Y PAYMORE காட்சியறை போன்றனவும் அமைந்துள்ளன. 1800க்கும் அதிகமான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றுவதுடன், மொத்தமாக 325,000சதுர அடிகளுக்கும் அதிகமான விற்பனை இடவசதியை கொண்டுள்ளதால், இலங்கையில் காணப்படும் மாபெரும் நவநாகரிக ஆடைகள் விற்பனைத் தொடராக திகழ்கிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மெனிங் சந்தைக்கு பூட்டு

வாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம்