கிசு கிசு

இலங்கையில் சடுதியாக அதிகரித்த ‘பாலியல் தொழிற்றுறை’

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் இவர்களுள் பலர் தமது வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழில்களை நாடுவதாகவும் ANI செய்தி நிறுவனம் மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக பெண்கள் பாலியல் தொழில்களை நாடும் நிலை அதிகரித்துள்ளதாகவும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் Standup Movement lanka என்ற அமைப்பு குறித்த செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் இலங்கையில் பாலியல் தொழிற்றுறை 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் தொழில்வாய்ப்பை இழக்கும் பெண்கள் மசாஜ் நிலையங்களுக்கு தொழிலுக்கு செல்வதுடன் பாலியல் ரீதியான தொழில்களில் ஈடுபடுவதாகவும் குறித்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.

Related posts

தனித்துப் பயணிக்க முடியாது

களனி பாலத்திற்கு ஆபத்து : உயர் பாதுகாப்பு வலமாக்க நடவடிக்கை

இஸ்ரேலை நியாயப்படுத்தும் விமல்