உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் காற்றாலை மின் திட்டம் – விலக முடிவு செய்த அதானி

இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான அனுமதிகளைப் பெற்ற போதிலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு தாமதங்களைக் காரணம் காட்டி, இன்றுவரை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தற்போது இலங்கை முதலீட்டு சபைக்கு இது குறித்து அறிவித்துள்ளது.

மேலும் இது ஒரு “மரியாதைக்குரிய விலகல்” என்றும், இலங்கையில் எதிர்கால திட்டங்களுக்கு தங்கள் நிறுவனம் திறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ரயில் சேவைகளில் தாமதம்

இலங்கை விஞ்ஞானி ஜவாஹிருக்கு அமெரிக்காவில் விருது!

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி