உள்நாடுசூடான செய்திகள் 1

“இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம் “டயானா கமகே

(UTV | கொழும்பு) –   கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்டுநாயக்கவிலுள்ள முதலீட்டுச் சபை வலயத்துள் மேற்படி கஞ்சா வளர்ப்பு செயற்றிட்டம் அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக 11 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். இந்த செயற்றிட்டத்தால் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் 4 முதல் 5 பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட முடியும்.மேலும் இச்செயற்றிட்டத்துக்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை, இத்திட்டத்தில் இணைந்துகொள்வதற்கு சுமார் 11 முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

கஞ்சா பயிர்ச்செய்கைக்கும் அதன் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கும் அவர்களே பொறுப்பாவார்கள். இவ் உற்பத்திகள் நாட்டின் வருமானத்துக்கு பங்களிக்கும். கடந்த கால முயற்சியை தோற்கடித்தது போன்று இந்த செயற்றிட்டத்தை தோற்கடிக்க முடியாது. அதற்கு அனுமதிக்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/UTVNewsTamil/posts/pfbid0VJiafpbJzUF695fjYriGzNc2z8LXLiQYgqueuPcyNZW3pzbyn6wwcgPvVCWrFErcl?__cft__[0]=AZX7iUuyXDoDVvBdFg4gOnx5AcfilFxKZyJ6SM5Mzs_Sp6GqZ0CPw6_UH3raHIUC1H1BQGlRz2Ljsl36yVXgQdZaRl9q_Oervd3ccUs_Eg3CY2iJ6a1b8vkYtdNhvLm2NshiiPP5F9sOKrK3VRgDTjGQZZxHqaUaZiLM50b98MIyn7ldn5CKB-BV8KM-tJVVpA4&__tn__=%2CO%2CP-R

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் கான்ஸ்டபள் ஒருவர் தற்கொலை

“ முஸ்லிம்களுக்கு ரமழான் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளது” ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை