உள்நாடு

இலங்கையில் உயரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

(UTV | கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,092 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 43 பேர் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய 6 பேருக்கும், மாலைதீவில் இருந்து வந்த 6 பேருக்கும், இந்தியாவில் இருந்து வந்த 3 பேருக்கும், இந்திய கடலோடி ஒருவருக்கும், கட்டாரில் இருந்து வந்த 26 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

மேலும், தற்போது 201 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, தொற்றிலிருந்து 2,879 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிறைவேறியது, 2023 ஆம் ஆண்டிற்க்கான வரவு செலவுத்திட்டம்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகாரம்

கடந்த 24 மணி நேரத்தில் 2 மரணங்கள் : 487 தொற்றாளர்கள்