(UTV | ஜப்பான்) – இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பிரவேசிக்கின்ற பயணிகள், கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை, பங்களாதேஷ், மாலைத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கின்ற பயணிகளுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் விமான சேவைகளை மீள ஆரம்பிக்க குவைட் அமைச்சரவை சம்மதம் தெரிவித்துள்ளதாக குவைட் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)