உள்நாடு

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,262 ஆக திகரித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம்(14) மாத்திரம் 28 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, பங்களாதேஷிலிருந்து வருகை தந்த 04 பேர், வியட்நாமிலிருந்து வருகை தந்த ஒருவர், கத்தாரிலிருந்து வருகை தந்த ஒருவர், பஹ்ரைனிலிருந்து வருகை தந்த கடற்படையினர் 04 பேர், இந்திய கடற்படையின் 05 பேர், குவைத்திலிருந்து வருகை தந்த ஒருவர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த 11 பேர் உள்ளிட்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3005 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 244 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்

திருமணத்தில் நடனமாடிய  யுவதி மரணம் 

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி – கெஹலிய மீது குற்றச்சாட்டு