வகைப்படுத்தப்படாத

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 13 கிலோ தங்கம் தமிழகத்தில் சிக்கியது

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 13.76 கிலோ தங்கம் தமிழகத்தின் இரண்டு பகுதிகளில் மீட்கப்பட்டுள்ளன.

விசேட புலனாய்வுத் தகவல் அடிப்படையில், குறித்த தங்கம், தமிழக சுங்க புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடிக்கும், மதுரைக்கும் இடையே பயணித்த பேருந்து ஒன்றில் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே 7.36 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ஒருவரிடம் இருந்தே குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாம்பன் – குத்துகல் கடற்கரைப் பகுதியில் வைத்து 6.4 கிலோகிராம் நிறைகொண்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தங்கம் படகு மூலம் கடத்தப்பட்டிருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

க.பொ.உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்

தாய்வான் நிலநடுக்கத்தில் பலி 9 ஆக உயர்வு

How to get UAE tourist visa fee waiver for kids