உள்நாடு

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஆட்கடத்தல் – முக்கிய நபர் கைது.

(UTV | கொழும்பு) –

இலங்கை ஆள்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை தமிழ்நாட்டில் தேசிய விசாரணை முகவர் அமைப்பினர் கைதுசெய்துள்ளனர். 39 வயது இம்ரான்கான் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2021 முதல் தப்பியோடியா நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பலமாதங்களாக இவரது நடமாட்டத்தை அவதானித்த இந்தியாவின் தேசிய விசாரணை முகவர் அமைப்பினர் தமிழ்நாட்டின் தேனிமாவட்டத்தில் இவரை கைதுசெய்துள்ளனர்.

ஆட்கடத்தல் தொடர்பான பாரிய சதிமுயற்சிகளில் இவர் ஒரு முக்கிய புள்ளி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையர்களை அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து வேறு நாடுகளிற்கு அனுப்பும் முயற்சிகளில் இவர் முக்கியமானவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு இராமநாதபுரத்தை சேர்ந்த இவர் நீண்ட காலமாக கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்று இலங்கையர்கள் சிலர் மங்களுரில் ஆவணங்கள் இன்றி தங்கியிருந்து கைதுசெய்யப்பட்டவேளை இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2021ஜூன் மாதம் மங்களுரில் 38 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டனர். தமிழ்நாடு பெங்களுர் மூலம் இவர்கள் மங்களுர் கொண்டுவரப்பட்டது விசாரணைகளின் போது தெரியவந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடலில் நீராட சென்ற மூவர் மாயம் – அம்பாறையில் சம்பவம்

editor

மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய 178 மாணவர்கள்

கொழும்பு தாமரைக் கோபுர கருத்திட்டத் தொகுதிக்கு மேலதிக காணி