உள்நாடு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம்!

(UTV | வாஷிங்டன் ) –  இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

 

வோசிங்டனில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கடன்மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணயநிதியத்தின் உதவி குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இந்த சந்திப்பிற்கு முன்னதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் , ✔அமெரிக்காவிற்கு இலங்கையுடன் உள்ள நீண்ட உறவை நினைவுகூர்ந்துள்ளார்.
✔இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மையின் 75 ஆவது வருடத்தை அடுத்த வருடம் கொண்டாடுகின்றோம்,
✔ காலநிலை நெருக்கடி உட்பட சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்படுகின்றோம்
✔ காலநிலை மாற்றம் குறித்தவிடயத்திற்கு தீர்வை காண்பதற்கு இலங்கை சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும்,✔ இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றது.

✔இலங்கைக்கு அமெரிக்கா 240 மில்லியன் டொலர் உதவிகளையும் கடன்களையும் வழங்கியுள்ளது.
✔ பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு மாத்திரமில்லாமல் அரசியல் ஸ்திரதன்மை முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இருநாடுகளும் இணைந்து செயற்படுகின்றன
எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் தலைமையில் நாளை விஷேட கலந்துரையாடல்

மின் துண்டிப்பு – அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

ரவி சேனவிரத்ன அதிரடியாக கைது!