உள்நாடு

இலங்கையின் முன்னணி இசை கலைஞரான சுனில் பெரேரா உயிரிழந்தார்

(UTV | கொழும்பு) –   இலங்கையின் முன்னணி இசை கலைஞரான சுனில் பெரேரா இன்று தனது 68வது வயதில் காலமானாதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான சுனில் பெரேரா, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், குணமடைந்தார்.

இதனையடுத்து சுனில் பெரேரா, வீடு திரும்பிய நிலையில், சில தினங்களுக்கு பின்னர் மீண்டும் சுகயீனமுற்று ஓரிரு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சுனில் பெரேராவின் நிலைமை கவலைக்கிடமாக மாறியதை அடுத்து, அவர் நேற்றைய தினம் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

Related posts

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

அமைச்சர் நஸீர் பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம் !

பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – அநுர

editor