உள்நாடுபுகைப்படங்கள்

இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

68 இலங்கை யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இலங்கை ஹஜ் கமிட்டியின் தலைவர் இப்ராஹிம் சாஹிப் அன்சார் உள்ளிட்ட சமய விவகார அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அங்கு தூதுவர் அவர்கள் இராச்சியத்தின் விருந்தினர்களாகச் செல்லும் இலங்கை யாத்ரீகர்களை வாழ்த்தியதோடு, இரு புனிதஸ்தலங்களினதும் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான முகமத் பின் சல்மான் அவர்களது அரசாங்கம் அல்லாஹ்வின் வீட்டிற்கு வருகைதரும் யாத்ரிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும், அவர்களின் வசதியை உத்தரவாதப்படுத்துவதற்கும், தமது ஹஜ் கிரியைகளை மிகவும் எளிதாக நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தூதுவர் மேலும் கூறுகையில், இலங்கை ஹஜ் யாத்ரிகர்களுக்கான ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பில், சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை ஹஜ் குழுவின் அதிகாரிகள் தூதரகத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றார்.

Related posts

ஜனாதிபதி அநுர முன்னர் பேசிய விடயங்களை இப்போது நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் – பழனி திகாம்பரம்

editor

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்வு

Devastating photos from Guatemala’s Volcano of Fire