அரசியல்உள்நாடு

இலங்கையின் மருந்து உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா கவனம்

இலங்கையின் மருந்து உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையின் மருந்து உற்பத்தியில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கு கியூபா அரசாங்கத்தின் வாழ்த்துக்களை கியூபா தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் இலங்கை மற்றும் கியூபாவுக்கிடையில் காணப்படும் 65 வருடங்களைக் கடந்த நீண்டகால இராஜதந்திர தொடர்புகளை மேலும் வலுப்படுத்தி, கியூப உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மீள ஆரம்பித்தல், இலங்கையின் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கென வைத்திய, விளையாட்டுக் கல்வி தொடர்பான புலமைப்பரிசில் வழங்கல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Related posts

ஹட்டன் பேருந்து விபத்து – சாரதிக்கு விளக்கமறியல்

editor

வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

வெள்ளை வேன் ஊடக சந்திப்பாளர்கள் – குரல் மாதிரிகள் ஒத்துப்போனது