உள்நாடு

இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமாக முன்னேற்றம்!

(UTV | கொழும்பு) –

இலங்கையின் பொருளாதாரம் கணிசமாக முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் இதற்கு ஜனாதிபதி வழங்கிய சிறந்த தலைமைத்துவத்தை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று   சந்தித்த ஜப்பான் நிதி அமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும், இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நிலைமையில் இந்த சாதகமான முன்னேற்றம் நம்பிக்கைக்குரியது என்றும், இது இலங்கை மீதான உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களின் சர்வதேச நம்பிக்கையை மேம்படுத்த சாதகமாக இருப்பதாகவும் ஜப்பான் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அடுத்த 05 வருடங்களில் நான் யார் என்பது தெரியும் – ப.சத்தியலிங்கம்

editor

நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம்

ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரினார் [UPDATE]