சூடான செய்திகள் 1

இலங்கையின் புதிய வரைப்படம் இன்று

(UTV|COLOMBO)-அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் இன்று  (31) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளதனால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீற்றரினால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமல்லாது மொரகஹாகந்த நீர்பாசன திட்டமும் இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1.500 என்ற அளவில் புதிய இலங்கை வரைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் நடு பகுதியில் பொது மக்களுக்கு இதை கொள்வனவு செய்ய முடியும் என்றும் நில அளவை ஆணையாளர் தெரிவித்தார்.

இதன் டிஜிட்டல் பதிவின் பிரதிகளை நில அளவை திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இரு அதிபர்கள் பாலியல் உறவு : நேரில் கண்ட மாணவனுக்கு ஏற்பட்ட சோகம்

இரண்டு பெண்கள் கொலை

எதிர்காலத்தில் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்-வைத்தியர் ஷாபியின் விசேட குரல் பதிவு (video)