உள்நாடு

இலங்கையின் புதிய தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

(UTV | கொழும்பு) –

இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை நேற்று சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், கைத்தொழில் பேட்டை ஸ்தாபிப்பு , கனிமத் துறைகளின் அபிவிருத்தி, கூட்டு முயற்சி விவசாய அபிவிருத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி போன்ற துறைகளை அவர்கள் நியமிக்கப்பட உள்ள நாடுகளுடன் இணைந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் இந்த புதிய தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

   

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாரதிகளுக்கான விசேட சுற்றிவளைப்புகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி : சந்தேக நபர் கைது

பேராதனை பல்கலை. மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!