உள்நாடு

இலங்கையின் நடவடிக்கையினை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – ஐ.நா

(UTV | கொழும்பு) – இலங்கை அரசாங்கத்தின் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கோரியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்தும் செயலாளர் நாயகம், உன்னிப்பாக அவதானித்து வருகின்றார் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் சார்பாக, பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் செயலாளர், இலங்கை மக்களுடன் இணைந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அனைத்து தரப்பினருக்கும் அவர் அழைப்பு விடுப்பதாக ஹக் தெரிவித்துள்ளார்.

Related posts

13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்

ஸ்ரீலங்கன் விமான சேவை விஷேட அறிவித்தல்

“இறக்குமதி தடை முழுமையாக நீக்கம்” நிதி இராஜாங்க அமைச்சர்