உள்நாடு

இலங்கையின் காப்புறுதி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை !

(UTV | கொழும்பு) –   இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு (IRCSL) பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட முகவர்களிடமிருந்து மட்டுமே காப்புறுதி கொள்கைகளை கொள்வனவு செய்யுமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாத காப்புறுதி நிறுவனங்களினால் மோசடி செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதில் மேலும், இந்த மோசடி நடவடிக்கைகள் 2000ஆம் ஆண்டின் எண் 43இன் காப்பீட்டுத் தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானவை.

இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் குறித்து info@ircsl.gov.lk எனும் இணையத்தளத்தினூடாக தெரிவிக்குமாறு மக்களுக்கு கூறப்பட்டுள்ளது. அத்துடன் காப்பீட்டுக் கொள்கைகள் தொடர்பான சட்டப்பூர்வ வழிகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு பதிவு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் பட்டியலை www.ircsl.gov.lk எனும் இணையத்தளத்தின் மூலம் பார்வையிட்டு செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விடுதலைப்புலித்தலைவர் புகைப்படத்துடன் முஸ்லிம்கள் பிரதேசங்களில் சுவரொட்டிகள்!

சென்னையில் இருந்து வந்த அனைவரும் பொது சுகாதார பரிசோதகரை அணுகவும்

மழை பெய்யக் கூடிய சாத்தியம்