வணிகம்

இலங்கையின் ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும் நிலை

(UDHAYAM, COLOMBO) – எதிர்காலத்தில் இலங்கையின் ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும் நிலை இருப்பதாக, ஒக்ஸ்போர்ட் வர்த்தக குழுமம் எதிர்வு கூறியுள்ளது.

கடந்த மே மாதம் இலங்கைக்கான ஜு.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தது.

இதன்படி 6000 இலங்கை உற்பத்திகளுக்கான வரிவிதிப்பு நீக்கப்பட்டு, ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகம் 4பில்லியன் யூரோக்களாக பதிவாகி இருந்தது.

இதில் இலங்கையின் ஏற்றுமதி 2.6 பில்லியன் யூரோக்களாகும்.

இந்த ஏற்றுமதியானது மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீடித்துழைக்கும் BATTERY மற்றும் AI MACRO TRIPLE கெமராவுடன் கூடிய Y20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள vivo

இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து IMF மீளாய்வு

மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்