உள்நாடு

இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றம்

(UTV | கொழும்பு) – இலங்கையின் அரசியல் வரலாற்றில் 43 வருடங்களின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

1977ஆம் ஆண்டின் பின்னர் தனிக்கட்சியாக 145 ஆசனங்களை பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 6,853,693 வாக்குகளை பெற்றுள்ளது. இது மொத்த வாக்குகளில் 59.09 சதவீதமாகும். அதற்கமைய 128 ஆசனங்களை பெற்றுள்ளது.

பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சி, தேசிய பட்டியல் ஊடாக 17 ஆசனங்களை பெற்றுள்ளது. மொத்தமாக 145 ஆசனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது முன்னுதாரணமான அரசாட்சி ஒன்றை கட்டி எழுப்புவோம் – சஜித்

editor

A/L உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது