உள்நாடுவணிகம்

இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து IMF மீளாய்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், அவசர கடன் உதவி தொடர்பில் இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து மீளாய்வு செய்யப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தகவல் வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் உதவிக்கு பதிலாக இந்த அவசர கடன் உதவியை வழங்குவது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படுவதாகவும் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் வழங்கப்படும் நாடுகளின் அண்மைய பட்டியலில் இலங்கை உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரினாலும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளினை அடுத்தே சர்வதேச நாணய நிதியம் குறித்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் அழைப்பு

கொரோனா தொற்றாளர்கள் எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை

மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று