உள்நாடு

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

(UTVNEWS | COLOMBO) –பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள அந் நாட்டு வெளிநாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலில் வெளிநாட்டு பணியாளர்களை இணைத்துக்கொள்ளுதல் மற்றும் தற்காலிக தொழில்துறையில் ஈடுபடுத்தல், இஸ்ரேலில் நடைமுறையில் உள்ள சட்டம், இஸ்ரேல் தேசிய மனித வள சந்தை நிலைமை மற்றும் வெளிநாட்டு ஊழியர் தொழில்வாய்ப்புக்கான பகிரங்க பிரிவு தொடர்பில் இஸ்ரேல் அரசாங்கத்தின் கொள்கையைப் போன்று தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வருடாந்த கோட்டா மற்றும் ஒவ்வொரு தொழில் வாய்ப்புக்கான அனுமதிப் பத்திரம் வழங்குதல் போன்ற விடயங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Related posts

16,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

editor

அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர விசேட உரை

editor