உலகம்உள்நாடு

இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!

(UTV | அமெரிக்கா) –  இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!

வோஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவில், இலங்கையர்களுக்காக 550 வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் என அறிவித்துள்ளது.

இதன்மூலம், 250 தாதியர்களும், 100 ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்களும், 200 தாதியர் உதவியாளர்களும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெற முடியும் அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முழுமையான துணை நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 584 ஆக உயர்வு [UPDATE]

MSC Messina கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

பிரேஸிலில் ஒரே நாளில் 4,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு