வகைப்படுத்தப்படாத

இலங்கைக்கு ஹெரோய்ன் கொண்டு வந்த இந்தியர் கைது

(UTV|COLOMBO)-ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இலங்கை வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யூ.எல். 126 என்ற விமானத்தில் இலங்கை வந்த அவர் இன்று அதிகாலை 5.20 மணியளவில் இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 212 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி சுமார் 2,100,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையை சேர்ந்த 33 வயதுடைய மனி தனாவெல் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘Belek Saman’ injured in Kuliyapitiya shooting

மஹதிர் மொஹமட் தலைமையிலான கூட்டணி வெற்றி

இலங்கை கடற்படை உதவியுடன் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்