சூடான செய்திகள் 1

இலங்கைக்கு ஷரிஆ பல்கலைக்கழகங்கள் அவசியம் இல்லை-பிரதமர்

(UTV|COLOMBO) இலங்கைக்கு ஷரிஆ பல்கலைக்கழகங்கள் அவசியம் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்ரஸா உட்பட இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பான சட்ட மூலம் பற்றிய கலந்துரையாடலில் பிரதமர் தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற போது தெரிவித்தார்.

இஸ்லாம் சமயத்தைப் போதிக்கும் கல்வி நிறுவனங்களை ஒழுங்குறுத்துவது தொடர்பாக முஸ்லிம் கல்வியியலாளர்களும் சட்டத்தரணிகளும் இணைந்த தயாரித்த எண்ணக்கரு ஆவணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டார்கள். சட்ட மா அதிபர் திணைக்களத்தின் எண்ணக்கருப் பத்திரம் அரசியல் யாப்புடன் உடன்படுகின்றதா என்பது பற்றி ஆராய்ந்து பிரதமருக்கு ஆலோசனைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுமாயின் திருத்தப்பட்ட எண்ணக்கருப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.

பட்டப்படிப்பை வழங்கும் நிறுவனங்கள் அனைவருக்காகவும் திறந்த அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Related posts

நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று அதிக மழைவீழ்ச்சி

3 பதில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

மண் ஏற்றி வந்த லொறி விபத்து ஒருவர் காயம்