விளையாட்டு

இலங்கைக்கு வெற்றி இலக்காக 388 ஓட்டங்கள்

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்றுவரும் ஒற்றை டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடர்கின்றது.

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 377 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்டநேர நிறைவின் போது, தமது 2ஆவது இன்னிங்ஸில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக, சிம்பாப்வே அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 356 ஓட்டங்களையும், இலங்கை அணி தமது முதலாவது இனிங்ஸில் 346 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 388 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கொண்டால், 2006ஆம் ஆண்டுக்குப்பின்னர் இலங்கை அணி 350க்கும் அதிக ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு வெற்றிப்பெற்ற போட்டியாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் அணி 5 விட்டுக்களினால் வெற்றி

மெஸ்ஸியின் ஒப்பந்தம் 4,000 கோடியை தாண்டியது

இங்கிலாந்து அணிக்கு இமாலய வெற்றி