சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கைக்கு வெற்றியிலக்கு 267 ஓட்டங்கள்

(UTVNEWS|COLOMBO) -இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு வெற்றி இலக்கு 267 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி இலங்கை அணி நியூசிலாந்து அணியை விட 18 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 267 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

இராஜாங்க அமைச்சர்கள் இருவரும், பிரதியமைச்சர்கள் ஆறு பேரும் இன்று சத்தியப்பிரமாணம்

ஜனாதிபதி திரைப்பட விருது விழா…

ஐ.தே.முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று பிற்பகல்