விளையாட்டு

இலங்கைக்கு வெற்றி

(UTV | பிரிஸ்பேன்) – டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில், இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இதன்படி புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 3வது இடத்துக்கு முன்னேறியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 24 பந்துகளில் 28 ரன்களும், உஸ்மான் கானி 27 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் 3 பந்துகள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணிக்காக பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை குவித்தார்.

Related posts

2019 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது ​மேற்கிந்தியத் தீவுகள் அணி

வெளுத்து வாங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி

ஐபிஎல் வீரர்களுக்கும் தடுப்பூசிதான் ஒரே வழி