உள்நாடு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமருக்கு அமோக வரவேற்பு

(UTV | கொழும்பு) – இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார். கொழும்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பின் , பாகிஸ்தான் பிரதமரை அமைச்சரவை உறுப்பினர்களுடன் இலங்கை பிரதமர் அன்புடன் வரவேற்றார். இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மற்றும் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் இம்ரான் கான் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து கெளரவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பிரதமருக்கு 19 துப்பாக்கி வேட்டுகள் முழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. பின்னர் , இராணுவ மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவு புத்தகத்திலும் (கோல்டன் புக்) பிரதமர் இம்ரான் கான் கையெழுத்திட்டார்.

இவ் விஜயத்தின் போது, பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். பாகிஸ்தான்-இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பாகிஸ்தான் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

பிரதமர் இம்ரான் கானில் விஜயத்தில் ,பாகிஸ்தான் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க மூத்த அதிகாரிகள் உட்பட உயர் மட்ட தூதுக்குழுவினரும் வருகைதந்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

தேர்தல் இப்போதைக்கு இல்லை : வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால சபை

நாட்டிலிருந்து வெளியேறும் 800 மருத்துவர்கள்???

சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கத்தில்