உள்நாடு

இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் அமெரிக்க அதிகாரி

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கையிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் இன்று (10) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்யும் டொனால்ட் லூ, தென்னிந்தியாவில் இருதரப்பு ஈடுபாட்டை மேம்படுத்தும் நோக்கில் சென்னையிலுள்ள துணைத் தூதரக அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

ஒவ்வொரு நாட்டுடனும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே அவரது பயணத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இலங்கை வருகையின் போது, ​​எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

Related posts

மருந்து விநியோகத்தின் போது தட்டுப்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்

திங்கள் முதல் விசேட வேலைத்திட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்